அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்சில் நேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதன்படி இலங்கை அணி 175 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
மொத்தமாக 35 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார் ரங்கன ஹேரத்.
அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வோர்ணர் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி மத்திய போசன இடைவேளை வரை 35 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்துள்ளது.






