அமெரிக்க தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சியில் நடந்த விபத்து!!(காணொளி)

461

show

அமெரிக்க தொலைக்காட்சிகளில் திறமைகளை வெளிக்காட்டும் பல நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறானதொரு நிகழ்ச்சியே America’s Got Talent.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஔிபரப்பான இந்நிகழ்ச்சியில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர் ரியான்ஸ்டாக்குடன் அம்பர்லின் இணைந்து பல சாகசங்களை செய்து காட்டினர்.

இதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை எடுத்து தனது வாயினுள்ளே திணித்தார், அதன் முடிவுப் பகுதியை தன் வாயில் வைத்து, அதைப் பார்த்து நேராக தீப்பொறி அம்பு விடும்படி அம்பர்லினிடம் தெரிவித்தார்.

அம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது கழுத்துப் பகுதியை அம்பு தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே சற்று அமைதியானது.

இந்த சம்பவத்தையடுத்து, ரியான்ஸ்டாக் தான் நலமாக உள்ளதாகவும், தனக்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை எவைும் கூறியுள்ளார்.

இது இயந்திரக் கோளாரால் ஏற்பட்ட விபத்து எனவும், ரியான்ஸ்டாக் அதிர்ஷ்டசாலி எனவும் நடுவர்களில் ஒருவரான ஸ்டாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.