அவுஸ்திரேலிய அணியை கதிகலங்கவைத்து தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

513

Australia's Steve O' Keefe, right, leaves the field as Sri Lankan team members celebrate their teams' victory by 106 runs in their first test cricket match in Pallekele, Sri Lanka, Saturday, July 30, 2016. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, காலி மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதன்படி முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 237 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. அதன்படி அவுஸ்திரேலியாவிற்கு 413 வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.

எனினும் ஆரம்பம் முதலே தடுமாறிய அவுஸ்திரேலிய அணியால் அனைத்து விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 183 ஓட்டங்களே பெற முடிந்தது.

அதன்படி 229 ஓட்டங்களால் போட்டியை வெற்றிகொண்ட இலங்கை 2-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை புரிந்தமை கூறத்தக்கது.

இன்றய போட்டியில் டில்ருவான் பெரேரா 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.