700 நாய்களை கொன்று குவித்த பாகிஸ்தான் அரச அதிகாரிகள் : காரணம் என்ன?

669

Dogs

பாகிஸ்தானில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக கூறி சுமார் 700க்கும் அதிகமான தெரு நாய்களை அரசு அதிகாரிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ளது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகராட்சி நிர்வாகம் தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

கராச்சி முழுவதும் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் வலம் வருவதால், அவற்றால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாக புகார்கள் சென்றுள்ளன.

பொதுமக்களின் புகார்களை பெற்ற நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்கள் முழுவதையும் கொன்றுவிட உத்தரவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்கள் மட்டும் கராச்சி நகரில் சுற்றி திரிந்த ஆயிரக்கணக்கான தெரு நாய்களை விஷம் கொடுத்து அரசு ஊழியர்கள் கொன்றுள்ளனர்.

கோழி இறைச்சியில் விஷ மாத்திரைகளை மறைத்து அவற்றை நாய்களுக்கு கொடுத்து கொன்றுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களின் சடலங்கள் தற்போது கராச்சி வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை தற்போது துப்புறவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

கராச்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் கண்டனத்திற்கு நகராட்சி அதிகாரியான Sattar Javed என்பவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘வீதிகளில் செல்லும் பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துக் குதறுகின்றது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

எனவே, பொதுமக்களின் நலனிற்காக தெரு நாய்களை கொல்வதை தவிற வேறு வழியில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Dogs2