ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தாலும் மோசமான வரிகளைக் கொண்ட பாடல்களை பாட மாட்டேன் : சோனு நிகம்!!

427

Sonu Nigam

மோச­மான வரி­களைக் கொண்ட பாடல்­களை நான் பாட மாட்டேன். ஏ.ஆர். ரஹ்­மானின் இசையில் பாடு­வ­தற்குக் கூட நான் மறுத்­தி­ருக்­கிறேன் என பொலிவூட் திரை­யு­லகின் பிர­பல பாடகர் சோனு நிகம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி தனது 43 ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டி­யவர் சோனு நிகம். இவ்­வ­ருடம் அவர் பாடிய 3 பாடல்கள் வெளி­யா­கின. இம்­மூன்று பாடல்­க­ளுமே இசை ரசி­கர்­களை வெகு­வாக கவர்ந்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் திரைப்­ப­டங்­களில் ஏன் சொற்ப எண்­ணிக்­கை­யான பாடல்­களை மாத்­திரம் பாடுகிறீர்கள் என அவ­ரிடம் வின­வ­ப்­பட்­டது. அக்­கேள்­விக்கு சோனு நிகம் பதி­ல­ளிக்­கையில், “என்னைப் பொறுத்­த­வரை திரைப்­ப­டங்­களில் பாடு­வது அவ்­வப்­போ­துதான். ஒவ்­வொரு இசை நிறுவ­னமும் தமது கலை­ஞர்­களின் பட்­டி­யலை வைத்­தி­ருக்­கின்­றன.

அப்­பா­ட­கர்கள் தமது இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்கு சிறந்த பாடல்­களைக் கொடுக்க வேண்டும். இந்த ட்ரெண்ட்டை நாம் விமர்­சிக்­க­வில்லை. தமது பாட­கர்­களால் ஒரு பாடலை பாட முடி­யாது என இசை தயா­ரிப்­பா­ளர்கள் கரு­தினால் மாத்­தி­ரமே அவர்கள் என்­னிடம் வரு­வார்கள்.

எனவே, சோனு நிகம் ஒரு வரு­டத்தில் தொடர்ச்­சி­யாக 100 பாடல்­களை பாட வேண்டும் என எதிர்பார்ப்­பதை மக்கள் நிறுத்­திக்­கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

தரக் ­கு­றை­வான வரி­களைக் கொண்ட பாடல்கள் குறித்து சோனு நிகம் கூறு­கையில், “மலி­வான வரி­களைக் கொண்ட பாடல்­களை பாட நான் விரும்­ப­வில்லை. இதே கார­ணத்தால் 7 வருடங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்­மானின் இசையில் பாடு­வ­தற்­குக்­கூட நான் மறுப்புத் தெரி­வித்­துள்ளேன்.

ரோபோட் (2010) படத்தின் பாட­லொன்றின் வரிகள் எனக்குப் பிடிக்­க­வில்லை. அதனால் அப்­பா­டலை நான் பாட­வில்லை. அவரும் (ரஹ்மான்) அப்பாடலில் பங்காற்றக் கூடாது என நான் கூறினேன்.

இதே போன்று மலிவான வரிகளைக் கொண்டிருந்ததால் ஹிமேஷ் ரேஷாமியாவின் இசையில் பாடுவதற்கும் நான் மறுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவீன தொழில்நுட்பமானது அனைவரையும் சிறந்த பாடகர்களாக்குவற்கு உதவுகிறது. ஆனால், மேடையில் பாடுவது ஒரு பாடகருக்கான கடும் பரீட்சைக் களமாக அமையும் எனவும் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.