சவுதியில் இலங்கைப் பணியாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது!!

578

Saudi

சவுதி – தமாம் அல்கோபர் நகரில் இலங்கை பணியாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

தமக்கான 8 மாத சம்பளம் வழங்கப்படாமை காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக இலங்கை பணியாளர்கள் 12 பேர் அல் கோபர் தொழிற்சாலை நுழைவாயிலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில ஈடுபட்டனர்.

அதற்கமைய இந்த பிரச்சினைகளுக்கான தீ்ர்வை வழங்குவதற்கு சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் உறுதி அளித்ததனையடுத்து எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதாக அங்கிருக்கும் இலங்கை பணியாளர் ஒருவர்
குறிப்பிட்டுள்ளார்.

இதனிடயே டுபாய் சதுவா நகரில் இலங்கை பணியாளர்கள் 34 பேரினால் ஆரம்பிக்க்படட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பளம் மற்றும் உரிய சலுகைகள் வழங்கப்படாமை காரணமாக தொழிற்சாலை ஒன்றில் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை பணியாளர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தும் சம்பளம்வழங்கப்படாமை காரணமாக சதுவா நகர பஸ் தரிப்பிடத்தில் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தங்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படாமை காரணமாக தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதாக டுபாயில் உள்ள இலங்கை பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.