ஏழு வடைகளின் விலை 27000 ரூபாய் : கோவிலில் போட்டி போட்ட பக்தர்கள்!!

615

Vadai

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி வடைசுடும் நிகழ்வில் சுடப்பட்ட ஏழு வடைகள் 27,000 ரூபாய்க்கு பக்தர்களால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அருகே அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ஏழு வடைகள் அவ்வாறு சுடப்பட்டன. இந்த வடைகளைச் சாப்பிடும் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், இந்த வடைகளை ஏலத்தில் எடுக்க பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் அந்த வடைகளை ஏலத்தில் விட்டனர். இதன்படி முதல் வடை 11,100க்கு ஏலம் போனது. அதனைத் தொடர்ந்து முறையே 2வது வடை 3700, 3வது வடை 4400 என மொத்தம் 7 வடைகளும் 26,600க்கு ஏலம் போனது.