ரியோ ஒலிம்பிக்கில் பிரித்தானிய வீரர் உலக சாதனை!!

248

Adam Peaty

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், பிரித்தானிய வீரர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தகுதிசுற்று 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டி ஆரம்பித்த சில நொடிகளிலே பிரித்தானியாவை சேர்ந்த Adam Peaty (21) பந்தைய தூரத்தை கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதில் சாதனை என்னவென்றால் இதற்கு முன்னர் நீச்சல் போட்டியில் பந்தைய தூரத்தை 57.92 நிமிடங்களில் கடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை Adam Peaty 57.55 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தார். இந்த இரண்டு சாதனையும் Adam Peaty தான் படைத்தார் என்பது சிறப்பு.

இது குறித்து Adam Peaty கூறியதாவது: போட்டி முடிந்ததும் ரசிகர்கள் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். இப்போட்டியில் தான் பிரேசில் வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே, பிறகு எதற்கு ஆரவாரம் செய்கிறார்கள் என்று யோசித்த பின், திரையில் தான் பந்தைய தூரத்தை 57.55 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர். இதன் காரணமாக ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர் என்பதை அறிந்தேன் என கூறியுள்ளார்.

Adam Peaty 2014 ம் ஆண்டில் காமன் வேல்த் 100 மீற்றர் நீச்சல் போட்டியில் சாம்பியன்பட்டம் வென்றார் மற்றும் 2015 ம் ஆண்டு வேர்ல்டு சாம்பியன்சிப் போட்டியில் 100 மீற்றர், 50 மீற்றர் போட்டிகளில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.