இந்தியாவின் தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள 75 இலங்கையர்கள் இன்று நாடு திரும்ப உள்ளனர்.
மூன்று குழுக்களாக அவர்கள் மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் வருகை தர உள்ளனர்.
30 பெண்கள் உள்ளடங்குகின்ற அந்தக் குழு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் சம்பந்தமான காரியாலயத்தின் தலையீட்டினால் நாடு திரும்பும் இவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
2011ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற 4870 பேர் தாயகம் திரும்பியுள்ளதுடன், மேலும் இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக இந்தியாவில் வாழ்கின்றனர்.






