முரளிதரனுக்கு திடீர் அழைப்பு விடுத்த இலங்கை கிரிக்கெட் சபை!!

437

Murali

இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முத்தையா முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சி கொடுப்பதால் நாட்டிற்கு துரோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கொழும்பில் நடக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

செயலாளர் மொஹான் டி சில்வா கூறுகையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அழைப்பிதல் கடிதம் தொடர்பாக முரளியின் பதிலை எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.