நீரிழிவு காரணமாக இலங்கையில் பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்!!

305

Health

நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பத்தாயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் காரணமாக ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகின்றார் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோயினால் அதிகளவில் 30 முதல் 69 வயது வரையிலானவர்களே உயிரிழக்கின்றனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 8 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீரிழிவு நோய்க்கு வழியமைக்கும் அதிக உடல் எடையைக் கொண்ட 26 வீதமானவர்கள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற் பயிற்சி சரியான உணவுப் பழக்க வழக்கங்களின் ஊடாக 90 வீதமானவர்கள் நீரிழிவு நோயிலிருந்து மீள முடியும்.

அதிகளவில் மரக்கறி, பழ வகைகள் உட்கொள்ளுதல் மற்றும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்றவற்றின் ஊடாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் அடி தூரம் நடப்பதன் மூலம் சிறந்த உடற்பயிற்சி கிடைக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.