வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!!

1412

 
வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று(10.08.2016) காலை முதல்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் ஊழியர்களின் தனிநபர் கோவைகள் கானாமல் போனமை தொடர்பாகவும் வவுனியா நகரசபை ஊழியர்கள் பலமுறை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் தமக்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், நேற்றைய தினம் இது சம்பந்தமாக நகரசபைச் செயளாளரை தாம் சந்திக்க முற்பட்டபோது செயளாளர் தம்மை உதாசீனப்படுத்தியதாகவும், எனவே தாம் தொடர் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

1 news (1) news (2) news (3) news (5)