கடந்த 2009 ம் ஆண்டு நடைப்பெற்ற யுத்தத்தின்போது பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி ஒரு நாள் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளராக இருந்த தயாநிதி இன்று(10.08.2016) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான போது 4 அரச அலுவலர்களின் சரீரப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிணையாளர்கள் நாளை ஒப்பமிடும் வரையிலும் தயாநிதியை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.