ஓடும் காரில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

311

Car

குடும்ப பிரச்­சினை கார­ண­மாக கண­வனே மனை­வியை காருடன் எரித்த சம்­ப­வ­மொன்று தமிழகத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

சென்னை, தேனாம்­பேட்டை ஆல­யம்மன் கோயில் பகு­தியைச் சேர்ந்­தவர் பிரேமா(29). இவ­ருக்கு சுரேஷ் என்­ப­வ­ருடன் 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­மணம் நடந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு மேனகா என்ற மகள் உள்ளார்.

குடும்ப பிரச்­சினை கார­ண­மாக இவர்கள் கடந்த 12 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பிரிந்­தனர். பின்னர், தன் மகள் மேன­கா­வுடன் தாய் வீட்­டுக்கே பிரேமா சென்­றுள்ளார்.

இதற்­கி­டையே நாக­ராஜன்(33) என்­ப­வ­ருடன் பிரே­மா­வுக்கு பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இது நாளடைவில் காத­லாக மாறி­யது. ஒரு கட்­டத்தில் இரு­வரும் திரு­மணம் செய்து கொண்டு வாழமுடிவு செய்­தனர். அதன்­படி கடந்த 9 ஆண்­டு­க­ளுக்கு முன் நாக­ரா­ஜனும் பிரே­மாவும் திரு­மணம் செய்து கொண்­டனர். இதற்கு நாக­ராஜன் குடும்­பத்­தினர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தனர்.

இதனால் நாக­ராஜன், பிரே­மா­வுடன் தேனாம்­பேட்­டை­யி­லேயே தனி­யாக வீடு ஒன்றை வாட­கைக்கு எடுத்து வாழ்ந்து வந்­தனர். இவர்­க­ளுக்கு யுஷ்வந்த்(4), நிஷந்த் ராஜ்(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதற்­கி­டையே நாக­ரா­ஜனின் தாய், உன் மனைவி குழந்­தை­களை அழைத்து கொண்டு புதி­ய­தாக கட்­டி­யுள்ள செங்­கல்­பட்டு வீட்­டிற்கு வந்­து­விடு என அழைத்­துள்ளார். இதை­ய­டுத்து கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன் நாக­ராஜன் மனைவி மற்றும் குழந்­தை­க­ளுடன் செங்­கல்­பட்டில் உள்ள புதிய வீட்டில் வசித்து வந்­தனர்.

அப்­போது நாக­ராஜன் அம்­மா­வுக்கும் மனைவி பிரே­மா­வுக்கும் இடையே அடிக்­கடி பிரச்­சினை ஏற்பட்­டுள்­ளது. இதனால் மீண்டும் சண்டை போட்டு கொண்டு பிரேமா இரண்டு மகன்­க­ளுடனும் தாய் வீட்­டிற்கு சென்­றுள்ளார். ஆனால் நாக­ராஜன் செங்­கல்­பட்­டி­லேயே தாயுடன் வசித்து வந்துள்ளார்.  வாரத்­திற்கு ஒரு­முறை மட்டும் குழந்­தை­களை நாக­ராஜன் வந்து பார்த்து, செல­வுக்கு பணத்தை கொடுத்­து­விட்டு சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிரேமா உற­வுக்­காரர் கணேசன் என்­ப­வரின் காரை எடுத்து கொண்டு நாக­ராஜன் தனது மனைவி மற்றும் குழந்­தை­களை செங்­கல்­பட்­டுக்கு அழைத்து செல்ல வந்­துள்ளார்.

பின்னர் மனைவி மகன்களுடன் தனது உற­வினர் காரில் புறப்­பட்டு சென்­றனர். காரை நாக­ராஜன் ஓட்டிச் சென்றார். நந்­தனம் வீட்டு வசதி வாரிய குடி­யி­ருப்பு முதல் பிர­தான சாலையில் கார் சென்று கொண்டிருந்­த­போது காரின் உள்ளே திடீர் தீ விபத்து ஏற்­பட்­டது.

இந்த விபத்தில் பிரேமா மற்றும் இளைய மகன் நிஷந்த் ராஜ் ஆகி­யோ­ருக்கு தீக்­காயம் ஏற்­பட்­டது. ஓடும் காரில் தீவி­பத்து ஏற்­பட்­டதால் பொது மக்கள் அனை­வரும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இது­கு­றித்து தக­வ­ல­றிந்த தேனாம்­பேட்டை தீய­ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்­பட்ட தீயை அணைத்­தனர். இந்த விபத்தால் நாக­ராஜன் மற்றும் மூத்த மகன் யஷ்வந்த் காயங்­க­ளின்றி உயிர்­தப்­பினர். காய­ம­டைந்த இரு­வ­ரையும் வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­தனர்.

இதற்­கி­டையே வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த பிரேமா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு உயி­ரி­ழந்தார்.

பிரேமா இறக்கும் முன்பு பொலி­ஸா­ரிடம் மரண வாக்­கு­மூலம் கொடுத்­துள்ளார். இது குறித்து தெரிவித்­துள்­ளதா­வது, நாக­ராஜன் செங்­கல்­பட்டில் உள்ள வீட்­டிற்கு பிரே­மா­வையும் இரண்டு மகன்க­ளையும் அழைத்து கொண்டு சென்ற போது இரு­வ­ருக்கும் இடையே தக­ராறு ஏற்­பட்­டுள்­ளது.

அப்­போது ஓடும் காரி­லேயே நாக­ராஜன் மறைத்து வைத்­தி­ருந்த பெட்­ரோலை எடுத்து பிரேமா மீது ஊற்றி காருடன் தீவைத்­து­விட்டு அவர் மட்டும் தப்பி ஓடி­விட்டார். உயி­ருக்கு போரா­டிய பிரேமா தனது குழந்­தை­களை காரில் இருந்து வெளியே தூக்கி வீசி­ய­தாக வாக்­கு­மூ­லத்தில் கூறி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது குறித்து பிரே­மாவின் மூத்த மகன் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “எனக்கு அப்பா செருப்பு வாங்கி கொடுத்தார். பின்னர் காரில் வீட்­டிற்கு வரும் போது அம்­மா­வுக்கும் அப்­பா­வுக்கும் சண்டை ஏற்­பட்டது. அப்போது அம்மா, பையில் இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி தீ வைத்து கொண்டார்” என கூறியுள்­ளான்.

இதையடுத்து உயிரிழந்த பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தின்படி சைதாப்பேட்டை பொலிஸார் நாகராஜனை கைது செய்தனர்.