அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டம் லிகாபாலியில் ஒரு தனியார் பள்ளி விடுதி உள்ளது. இங்கு தங்கியிருக்கும் 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் 14 பேரை விடுதி வாடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வாடன் விபின் விஸ்வானை கைது செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடமும் பொலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதி வாடன் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று வாடனும், பள்ளி நிர்வாகிகளும் மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மாணவிகள் வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். பின்னர் சுவர் ஏறி குதித்து தப்பி வந்த மாணவிகள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவிகள் கற்பழிப்பு பற்றி கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியிடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.