ஒரு வாரத்திற்கு செல்ஃபி எடுக்கத் தடை!!

551

Selfi

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு வார காலத்துக்கு மாநிலங்களில் உள்ள தேசியச் சின்னங்கள் முன்பு செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா துறை அமைச்சகம் சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஆகஸ்ட் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை, மாநிலங்களில் உள்ள தேசியச் சின்னங்கள் முன்பு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ஃபி எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி முதல் ஆறு நாட்கள் வரை இந்தியாவின் தலைநகரின் மத்திய பகுதியான ராஜ்பாத்தில், சுற்றுலா துறை ஏற்பாட்டில் பாரத் பார்வ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பாரத் பார்வ், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வு, இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். குடிமக்கள் மத்தியில் தேசப்பற்றை ஊக்குவிப்பதே இந்த நிகழ்வின் முக்கிய குறிக்கோளாகும்.

சுதந்திர தினம் மற்றும் பாரத் பார்வ் கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை கவனத்தில் கொண்டே சுற்றுலா துறை இத்தடையை அமல்படுத்தியுள்ளது.