தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே திருப்பி போடும் செயலில் ஈடுபடுவேன் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..
நான் அடிமைகளின் கூடாரத்தில் இருக்க விரும்பவில்லை. இரு பெண்கள் மூலம் என் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற தொல்லை கொடுத்தால் தமிழக அரசியலையே திருப்பி போடும் செயலில் ஈடுபடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இரு பெண்கள் அளித்த புகாரை தொடர்ந்து தூத்துகுடியில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகலா புஷ்பா மீது நாளைவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






