சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்து வருகிறது.
அந்த வகையில் சீனாவின் இளம் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில், அந்தரத்தில் தொங்கியபடியே நடத்திக்கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக தனியார் நிறுவனம் ஒன்றை அணுகிய அந்த மணமகன், அவர்களின் ஏற்பாடின்படி, சீனாவின் Shiniuzhai தேசிய பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நிலத்தில் இருந்து 590 அடி உயரத்தில், அந்தரத்தில் மிதந்தபடி இந்த நிகழ்வு நடந்துள்ளது. துணிவு மிகுந்த அந்த மணமகன் முதலில் தகுந்த ஏற்பாடுடன் கீழே தொங்கவிடப்பட்டிருந்த சிவப்பு நிற மேடை ஒன்றில் இறங்கி, பின்னர் தமது வருங்கால மனைவியையும் அதில் இறங்க வைத்து, அந்த மிதக்கும் மேடையில் மோதிரம் மாற்றியுள்ளனர்.
சிவப்பு உடையில் மணமகனும் பாரம்பரியமான நீண்ட வெள்ளை உடையில் மணமளும் அந்த மிதக்கும் மேடையில் அமர்ந்தபடி மோதிரம் மாற்றிக்கொண்டது, அங்கிருந்த சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி, பயம் கலர்ந்த உணர்வையும் வெளிப்படுத்தியது.
ஆனால் முகத்தில் மாறாத புன்னகையுடம் மணமக்கள் இருவரும் அந்த நிகழ்வு முடியும்வரை புகைப்படத்திற்கு போஸ் அளித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர், இதுபோன்ற 5 ஜோடிகள் இந்த பாலத்தின் மத்தியில் நின்றபடி தங்கள் திருமண வாக்குறுதியை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.