3 ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வந்த நயன்தாராவின் திருநாள் படம் தற்போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நயன்தாரா வெற்றி நாயகியாக வலம் வந்தார். வந்தாரா என்று கேட்டால் ஆம் என்பதே பதில். அதற்கு காரணம் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 10 படங்களில் நடித்தார். அந்த 10 இ ல் 8 படங்கள் ஹிட் மற்ற 2 படங்கள் ஓடிவிட்டன.
கோலிவூட்டில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த ஜீவா, வெற்றி தாரகையான நயன்தாராவுடன் சேர்ந்து ‘திருநாள்’ படத்தில் நடித்தார். நயன்தாராவின் ராசிக்காவது இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘திருநாள்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாரா அசத்திவிட்டார் என்றார்கள். ஆனால் படம் கல்லாகட்டாமல் போயுள்ளது. பாவம் ஜீவாவுக்கு இதுவும் தோல்வி படமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றிப் படங்களை அளித்த பெருமையுடன் தில்லாக ரூ.4 கோடி சம்பளம் கேட்ட நயன்தாராவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் முதல் தோல்விப் படமாக ‘திருநாள்’ அமைந்துள்ளது.
திருநாள் ஊத்திக் கொண்ட கவலையில் இருக்கும் நயன்தாரா வெங்கடேஷுடன் சேர்ந்து நடித்த பாபு பங்காரம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். பாபு பங்காரம் நாளை வெளியாகிறது.
தெலுங்கு படமான பாபு பங்காரம் தமிழில் டப் செய்யப்பட்டு செல்வி என்ற பெயரில் வெளியாகிறது.






