வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே இன்று (12.08.2016) காலை 8.45 மணியளவில் மோட்டார் சைக்கில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா குருமன்காடு (science hall) க்கு அருகே வவுனியாவிலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றும் குருமன்காட்டிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.













