வவுனியா ஒமந்தையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கின்றது!!

731

 
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.

எனினும் இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.

ஆனால் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் புதன்கிழமை (10.08.2016) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அமைச்சர்களே விவசாயி வீதியில் உணவின்றி நீங்கள் சொகுசு அறைகளிலா! , நீதி கேட்டு உங்கள் வாக்காளன் நடு வீதியில் சுகாதார அமைச்சரே நீ மார்க்கத்தின் சொகுசு பாதையில் இன்று கனடாவிற்கு புறப்பட்டு செல்கிறீர் என பல்வேறு வாசங்களை ஏந்திய பாதாகைகள் ஒமந்தை மக்களால் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஓமந்தை பிரதேசசபைக்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளவரின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வருகைத்தந்து பார்வையிட்டார்.

DSC_0053 DSC_0054 DSC_0056 DSC_0057 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0061 DSC_0062 DSC_0063 DSC_0064 DSC_0067 DSC_0069 DSC_0070