அவுஸ்திரேலியாவிலிருந்து 48 பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்!!

724

australia_deported

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 48 பேர் கொழும்புக்கு நேற்று திருப்பியனுப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் கூறியுள்ளது.

இவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளினுள்ளே வராதவர்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த குழுவிலிருந்த 35 ஆண்களும் 7 பிள்ளைகள் உட்பட 13 பேரும் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களோடு அவுஸ்திரேலியாலிருந்து கொழும்புக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது.

விஸாவின்றி அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் வரும்போது அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தமைக்கு கூறும் காரணங்கள் நன்கு மதிப்பிடப்பட்டுத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுமென பேச்சாளர் ஒருவர் கூறினார்.