தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு!

479

1 (44)

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர், திருகோணமலை,கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இன்று வெள்ளிக்கிழமை(12) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய்-பியந்த மாவத்தையில் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ் சிங்ஹ (வயது 87)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே, உயிரிழந்தவரின் மகளினால் தந்தை காணாமல் போயுள்ளதாகவும்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கு றித்த முறைப்பாட்டில் குடும்பத்தாருடன்முரண்பட்டுக்கொண்டு இனிமேல் உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன் என்று தந்தைகூறிவிட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதே வயோதிபர் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.சடலத்தை, நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய்பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.