சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 சீன பெண்களை நாட்டிலிருந்து வெளியேறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா பொலிஸாரினால் குறுத்த பெண்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சீன பிரஜைகள் சுற்றுலா வீசா மூலம் வருகை தந்து, மொழிபெயர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் அது சட்டவிரோதமானது என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர்கள் நாட்டில் இருந்து வௌியேற தயாராக இருப்பதாக இதன்போது நீதிமன்றில் தெரிவித்தார்.
அவர்கள் நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், அவர்களை நாட்டை விட்டு வௌியேறுமாறும், அதனை உறுதிப்படுத்தும் தகவல்களை எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.






