பாகிஸ்தானுக்கு விடுமுறையை கழிக்க சென்ற பிரித்தானிய இளம் பெண் ஒருவரை அவரது உறவினர் ஒருவர் அடைத்து வைத்து 3 ஆண்டுகள் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் doncaster பகுதியில் தமது உறவினர் ஒருவருடன் குடியிருந்து வருபவர் பெயர் வெளிடப்படாத அந்த இளம் பெண். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு விடுமுறையை கழிக்கும் பொருட்டு பாகிஸ்தானில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு 2 மாதங்கள் தங்கியிருந்த அவருக்கு விடுமுறை முடிவுக்கு வரும் அந்த வாரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று காத்திருந்தது. சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறையில் வந்த இவரது உறவினர், துப்பாக்கியை காட்டி மிரட்டி தமது மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் சகோதரர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு பயந்த இவரை 21 வயது இளைஞர் ஒருவருக்கு ஒரு சில தினங்களிலேயே மண ஒப்பந்தம் செய்து முடித்து வைத்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு இவர் ஆளாகியுள்ளார்.
அறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் தொடர்ந்து பல்வேறு சித்திரவதைகளுக்கு இவர் இரையாகியுள்ளார். இதனைடையே அந்த நபருடன் திருமணம் என்று கூறி சடங்கு ஒன்றையும் நடத்தி முடித்துள்ளனர்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால் மிக எளிதில் பிரித்தானியாவில் நுழைந்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் இந்த திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தொடர்ந்து 3 ஆண்டுகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை அனுபவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் போராடி கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் விவாகரத்து பெற்று அங்கிருந்து பிரித்தானியா வந்து சேர்ந்துள்ளார்.
தமது வாழ்க்கையின் முக்கிய நாட்களை பாகிஸ்தானின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சித்திரவதையில் தொலைந்து போனதை நினைவுகூறும் அவர், தமது சிறு வயதிலேயே ஏற்பட்ட வலிகளில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் பிரித்தானியாவில் கட்டாயத்திருமணம் குறித்த 1220 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 44 சதவிகித வழக்குகள் பாகிஸ்தான் தொடர்புடையவை என பிரித்தானிய அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன.






