பதுளை – இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் விழுந்த 19 வயது வௌிநாட்டு யுவதி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளம்பெண் தனது தந்தையாருடன் அப் பகுதிக்கு நீராடச் சென்ற வேளையே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு பலியானவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.