கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்து கட்டிலில் வைத்து சடலத்தின் மேல் கணவனும் கள்ளக்காதலியும் உல்லாசமாக இருந்த சம்பவமொன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.
டில்லியின் ஷாகார்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி பைரோஸ், ஹாலிம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பைரோஸுக்கு, பூஜா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது, இதனை அறிந்து கொண்ட ஹாலிம். அவரின் வீட்டுக்கு சென்று சண்டையிட்டுள்ளார்.
தகராறு முற்றிப் போகவே, பைரோஸ் மற்றும் பூஜா சேர்ந்து ஹாலிமை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்போது இருவரும் சேர்ந்து மனைவியை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் அவரது உடலை மறைத்ததுடன் முதல் நாள் சடலத்தை கட்டிலில் போட்டு அதன் மீது மெத்தையை வைத்து இருவரும் உல்லாசமாக இருந்து ள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசவே, ஹாலிமை சாக்கு பையில் போட்டு வீதியில் வீசி எறிந்துள்ளனர். சாக்கு பையிலிருந்து அழுகிய நாற்றம் வந்தவுடன், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பொஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சாக்கு பையை பார்த்தபோது சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது, உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஹாலிம் என்பதும், கணவரே கொலை செய்ததும் தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






