குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிகொடுத்த யுவதி சிறையில் அடைப்பு!!

291

1

கடந்த கால குற்றச் செயல்கள் காரணமாக அழகுராணி பட்டத்தை பறிக்கொடுத்த அமெரிக்க யுவதியொருவர், மற்றொரு குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கெய்ட்லின் சிபுவென்டஸ் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் கோர்பஸ் கிறிஸ்டி நகரின் அழகுராணியாக கடந்த ஜூன் மாதம் முடிசூட்டப்பட்டிருந்தார்.

ஆனால் கெய்லின் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்டவர் என்பதும் அவர் ஏற்கெனவே திருமணம் செய்தவர் என்பதும் பின்னர் தெரிய வந்தது. இதனால் அவர் அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டமை விதிகளுக்கு முர ணானது என சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

கெய்ட்லின் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிராக போட்டி யாளர்களான யுவதிகள் சிலர் சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதனால் கடந்த மாதம் கெய்ட்லின் சிபுவென்ட ஸின் அழகுராணி பட்டம் அப் போட்டி ஏற்பாட்டளர் களால் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப் போட்டியில் இரண்டா மிடம் பெற்றிருந்த வலே ரியா பரேரா எனும் யுவதி புதிய அழகுராணியாக முடி சூட்டப்பட்டார். இவரும் கெய்லினின் தெரிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 25 வயதான கெய்லின் சிபுவென்டஸ், 2013 ஆம் ஆண்டு மது போதையில் வாகனம் செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருந்தார். பின்னர் இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின் பல நிபந்தனைகளின் அடிப்படையில் நன்னடத்தை கண் காணிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இரவு விடுதிகளுக்கு செல்லக்கூடாது என்பதும் இந் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

இந்நிலையில், கெய்ட்லின் இரவு விடுதியொன்றுக்கு சென்றமை தெரிய வந்ததைய டுத்து கெய்ட்லினை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தவாரம் பொலிஸாரிடம் கெய்ட்லின் சரணடைந்தார். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அழகுராணி போட்டி தொடர்பான நிகழ்வொன்று மேற்படி இரவு விடுதியில் நடைபெற்றதாலேயே கெய்ட்லின் அங்கு சென்றார் என அவரின் சட்டத்தரணி கூறினார்.

எனினும், அவர் நன்னடத்தை விதிகளை மீறியதால் அவரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 3 4