பசிக்கொடுமையால் தனது பொம்மையை விற்ற சிறுவன்: உதவிக்கரம் நீட்டிய பொலிஸ்!!

585

573259cae4b0789414158041_o_F_v1
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் 5 வயது சிறுவன் பசி மிகுதியால் தனது கரடி பொம்மையை விற்பனை செய்வதற்காக சாலையில் நடந்து செல்பவர்களிடம் அதனை வாங்கிகொள்ளுமாறு கேட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓகியோ மாகாணத்தில் உள்ள சுரங்கப்பாதையில் நின்றுகொண்டு 5 வயது சிறுவன் ஒருவன் தனது கரடி பொம்மையை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளான். னால், சாலையில் நடந்துசென்றவர்கள் யாரும் அந்த கரடி பொம்மையை வாங்கவில்லை, இந்நிலையில் அந்த பாதையில் நடந்து வந்துகொண்டிருந்த Steve Dunham என்ற பொலிஸ் அதிகாரி அச்சிறுவனை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என சத்தமிட்டுள்ளார்.

அதற்கு அச்சிறுவன், எனக்கு மிகவும் பசிக்கிறது, அதனால் எனது கரடி பொம்மையை விற்று உணவு வாங்கப்போகிறேன் என கூறியுள்ளான். இதனைக்கேட்டு பரிதாபப்பட்ட பொலிஸ், அச்சிறுவனை அருகில் உள்ள கடைக்கு அழைதது சென்று உணவு வாங்கிகொடுத்துள்ளார்.அதன் பின்னர் அச்சிறுவனை அவனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார், அங்கு சென்றவர் சிறுவனின் வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வீடு மிகவும் குப்பைகள் நிறைந்தும், ஆல்கஹால் பாட்டில்கள் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்களில் பூனைகள் சிறுநீர் கழித்தும் வைத்துள்ளது.

இதுகுறித்து அச்சிறுவனின் தாயாரிடம் விசாரித்ததில், எனது குழந்தைகளை நன்றாக தான் பார்த்துக்கொள்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார், ஆனால் இதனை காதில் வாங்கிகொள்ளாத பொலிஸ் , காவல் நிலையம் வந்து உங்கள் விளக்கத்தை தெரிவியுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார்.இதனால் கோபம் கொண்ட அத்தாயார், Franklin காவல் துறையின் முகநூல் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், எனது மகன் தனது சகோதரர்களுடன் விளையாடுவற்காக வெளியில் செல்வான், அதுபோன்று தான் இப்போதும் சென்றுள்ளான், மேலும் எனது மகன்களுக்கு உணவு கொடுக்காமல் வளர்க்கவில்லை, பொலிசார் என்மீது அபாண்டமாக பழிபோட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர், தற்போது இக்குழந்தைகள் அனைவரையும் Warren குழந்தைகள் நல மையம், இக்குழந்தைகளின் உறவினர்கள் வீட்டில் ஒப்படைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு முடியும் வரை இத்தம்பதியினர் குழந்தைகளை சந்திக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.