இங்கிலாந்து இளையோர் அணியை இங்கிலாந்தில் வைத்து WhiteWash செய்த இலங்கையின் இளையோர் அணி!!

661

SL

இங்கிலாந்திற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும், இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 3-0 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியை 3-0 என்று டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ள நிலையில் இலங்கையின் 19 வயதிற்குட்பட்டோர் அணியும் இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடியுள்ளமை பாராட்டதக்கதே.

ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றிய நிலையில், அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன் படி முதலில் ஆடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 49.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக 2வது போட்டியில் சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியிலும் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார்.

அவிஷ்க பெர்னாண்டோ 138 ஓட்டங்களையும், டிலான் ஜயலத் 67 ஓட்டங்களையும், தலைவர் சரித் அசலன்க 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

301 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை மட்டுமே பெற்று 24 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசரங்க டி சில்வா 3 விக்கட்டுகளையும், தமித் சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றி இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.