யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்தில் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக தகவல்களை தந்துதவுமாறு யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பிரிவினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
மேற்குறித்த நபர் நீதிமன்ற அனுமதியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சையின் பின்னர் அந்நபர் வைத்தியசாலையினால் விடுவிக்கப்பட்டார்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ள குறித்த நபர் தன்னை பற்றி எந்த விபரங்களையும் தெரிவிக்காததன் காரணமாக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 077-4035013 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.







