குப்பைத் தொட்டியில் உறங்கிய இளைஞர் மீள்சுழற்சிக்கு உட்படும் நிலையிலிருந்து தப்பினார்!!

716

Kuppai

இளைஞர் ஒருவர் குப்பைத் தொட்­டி ­யொன்­றுக்­குள் உறங்­கி­ய­போது, குப்­பை­ க­ளுடன் சேர்த்து மீள்சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்­தப்­படும் ஆபத்­தி­லி­ருந்து நூலி­ழையில் தப்­பிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது.

ஓர்கன் மாநி­லத்தின் அல்­பெனி நகரைச் சேர்ந்த 23 வய­தான ஐவன் ரொசா­லியோ மெண்டிஸ் பெரெஸ் எனும் மேற்­படி இளைஞர் வீதி­யோ­ரத்­தி­லி­ருந்த குப்பைத் தொட்டி ஒன்­றுக்குள் ஆழ்ந்த உறக்­கத்­தி­லி­ருந்தார்.

அப்­போது, குப்பை ஏற்­றிச்­செல்லும் வாக­ன­மொன்­றுக்குள் குப்­பை­க­ளுடன் சேர்த்து மேற்­படி இளைஞரும் கொட்­டப்­பட்டார். அக்­ குப்­பைகளை அரைத்து மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்த வேளையில், விழித்­தெ­ழுந்த அவர், தனது நிலையை உணர்ந்து திடுக்­கிட்டார்.

உரத்த சத்தம் எழுப்பி சார­தியின் கவ­னத்தை ஈர்க்க அவர் முயன்றார். எனி னும், சார­திக்கு அவரின் குரல் கேட்­க­வில்லை. அதை­ய­டுத்து குப்பை வண்­டி­யி­லி­ருந்த கார்ட்­போட்­களை வெளியே வீசி எறிந்தார் ஐவன்.

அதை அவ­தா­னித்த குப்பை வண்­டியின் சாரதி, அவ்­ வா­க­னத்தின் பின்­புறம் சென்­ற­போது ஒருவர் உள்ளே இருப்­பதை உணர்ந்து அவ­சர சேவைப் பிரி­வு க்கு தகவல் கொடுத்தார். அதன்பின் தீய­ணைப்புப் படை­யி­னரின் உத­வி­யுடன் குப்பை வண்­டி­யி­லி­ருந்து ஐவன் மீட்­கப்­பட்டார்.

அவர் பல தடவைகள் குப்­பை­க­ளுடன் சேர்த்து அழுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தீய­ணைப்புப் படை அதி­காரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐவனின் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.