தனது தாயாரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தியதால் வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்த இளைஞன்!!

542

1

அமெ­ரிக்­காவில் வசிக்கும் ஜேர்­ம­னிய இளைஞர் ஒருவர் கலி­போர்­னியா மாநி­லத்தில் பல்­வேறு வாகனங்கள், வீடு­களை தீக்­கி­ரை­யாக்­கி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்டுள்ளார்.

தனது தாயாரை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து அதி­கா­ரிகள் நாடு கடத்­தி­யதால் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­யாக தீ வைக்கும் நட­வ­டிக்­கையில் தான் ஈடு­பட்­ட­தாக அவர் கூறி­யுள்ளார்.

29 வய­தான ஹரி பர்க்ஹார்ட் எனும் இந்த இளைஞர் 2011 டிமெ­சம்பர் 30 ஆம் திக­திக்கும் 2012 ஜனவரி 2 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட நாட்­களில் கலி­போர்­னி­யாவின் சான் பெர்­னாண்டோ, மேற்கு ஹொலிவூட் பகு­தி­களில் இக்­குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடை­பெறும் வழக்கு விசா­ர­ணையில் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர்.

தனது தாயார் டொரத்தி பர்க்­ஹார்ட்டை அதி­கா­ரிகள் நாடு கடத்­தி­யதால், அமெ­ரிக்­காவை தீயில் வாட்­டி­யெ­டுக்கப் போவ­தாக இவர் அச்­சு­றுத்­தினார் எனவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் வாக­னங்­க­ளுக்கு வைத்த தீ பல வீடு­க­ளுக்கும் பர­வி­யது. இச்­ சம்­ப­வங்­களில் எவரும் காயமடை­யாத போதிலும் சொத்துகளுக்கு 30 இலட்சம் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2