வவுனியா நோக்கிப் பயணித்த கொள்கலன் விபத்து!!

515

A9

ஏ9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.