வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (18.08.2016) காலை 11.30 மணியளவில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தாண்டிக்குளத்தில் சாரதி பயிலுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாகனம் வீதியிலிருந்து மறுபக்கம் திரும்ப முற்பட்ட பொது ஏ9 வீதியிலிருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பரில் மோதுண்டது.
கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளனாது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


























