வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவை நடாத்தும் முத்தமிழ் சங்கமம் 2016 நிகழ்வு!!

1374

HINDU

சர்வதேச இந்து இளைஞர் பேரவை நடாத்தும் முத்தமிழ் சங்கமம் 2016 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.08.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் சைவ சிந்தாந்த முதுகலைமாணி சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தமிழ்நாடு கூனம்பட்டி ஆதின 57 வது குருபீடம் ராஜ சரவண சுவாமிகள் கலந்து ஆசி வழங்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிக துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், பேராதனை பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன், முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். விசேட விருந்தினராக பேரவையின் அமைப்பாளர் சி.கணேஸ்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

நந்திக் கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல், பஞ்சபுராணபாராயணம், தமிழ்மொழ வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து ஆதிவிநாயகர் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை பேரவையின் உப செயலாளர் கி. வசந்தரூபன் நிகழ்த்த ஆசியுரையினை கு.லம்போதரக் குருக்கள் மற்றும் ரவீந்திர உமாசுதக்குருக்கள் வழங்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தொடக்கவுரையினை சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உபதலைவர் வீ.பிரதீபனும் வாழ்த்துரையினை தமிழ்மணி. மேழிக்குமரன் வழங்கவுள்ளனர்.

நாம் தொலைத்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி செ.மதுரகனின் சிறப்புரையும், வாத்திய கலாலய மாணவர்களின் வாத்திய கானாம்ருதம் நிகழ்வும் கீர்த்தனாலயா இசைக்கூட மாணவர்களின் தமிழிசை நிகழ்வும் நுண்கலைமாணி திருமதி.புவனறூபி ஜெகதீசனின் மாணவி பைரவி இராஜேந்திரம் ருத்ரதாண்டவம் நடன நிகழ்வும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து தமிழ்மாமணி தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில்
காலவோட்டத்தில் இன்று தமிழர் பண்பாடு தளர்ந்துவிட்டதா? வளர்ந்துநிற்கிறதா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

தளர்ந்துவிட்டது எனும் தலைப்பில ஜெ.மயூரசர்மா, ஜெ.கோபிநாத், ஆ.ஜெசிதாஆகியோரும், வளர்ந்துநிற்கிறது எனும் தலைப்பில் S.S.வாசன், ஜெ.திருவரங்கன், ந.ஜெனன் ஆகியோரும் வாதாடவுள்ளனர்.

இந் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சீ.யோகேஸ்வரன், கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத் தலைவர் தி.இராசநாயகம் தொல்லியல்துறை ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை, எழுத்தாளர் திருமதி.சி.தமயந்தி, யாழ் பல்கலைக் கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமன் ஆகியோர கௌரவிக்கப்படவுள்ளனர்.

நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை பேரவையின் செயலாளர் ல.சதீஸ்குமார் வழங்கவுள்ளார்.

print 01 print 02