இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஷேவாக் கடும் பயிற்சி!!

313

virendra_sehwag

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் மோசமான ஆட்டம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக சர்வதேச போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது டெஸ்டுக்கு (மார்ச் மாதம்) பிறகு ஷேவாக் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அதற்கு முன்பே அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஜனவரி 3ம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியோடு நீக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஷேவாக் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது கேள்வி குறியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஷேவாக் மிகுந்த ஆர்வமாக உள்ளார். உள்ளூர் போட்டியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காக அவர் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். இல் பயிற்சி பெறுகிறார்.

சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து பயிற்சி பெறுகிறார். எம்.ஆர்.எப். பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் உள்ளார்.

உள்ளூர் போட்டியில் திறமையை நிரூபிப்பதே ஷேவாக்கின் குறிக்கோளாக உள்ளது. என்.கே.பி. சாலவே சாலஜர் கிண்ண போட்டி செப்டம்பர் 26ம் திகதி தொடங்குகிறது. இதில் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அல்லது தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான அணியில் இடம் பெறுவதை ஆர்வமாக கொண்டுள்ளார்.