14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில்!!

389

Abu

14 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவரை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான இளைஞன் தனது தங்கை உறவு முறையான சிறுமி ஒருவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பாலமுனை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் (17) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

28 வயதான இளைஞனே சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.