சில்லு கழன்று விபத்துக்குள்ளான பயணிகள் பஸ்!!

346

Bus

இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியின் பெல்வாடிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமாக இருந்து சில்லு திடீரென தனியாக கழன்று பஸ்ஸை விட்டு விலகியுள்ளது.

இதனையடுத்து குறித்த பஸ் நடு வீதியில் சடுதியாக நிறுத்தப்பட்டது. இதனால் இரத்தினபுரி பலாங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தால் பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.