புற்றுநோயிலிருந்து மீண்டடு ஒலிம்பிகில் தங்கம் வென்ற 54 வயது நபர்!!

381

SAILING-OLY-2016-RIO-PODIUM

புற்­று­நோ­யினால் பீடிக்­கப்­பட்டு நுரை­யீ­ரலில் ஒரு பகு­தியை இழந்த 54 வய­து­டைய சன்­டி­யாகோ லெங், மிகவும் கடி­ன­மான பாய்­மரப் படகோட்டப் போட்­டியில் தங்கப் பதக்கம் வென்­றுள்ளார். இதன் மூலம் எத்­த­கைய தடைகள் வந்­தாலும் வாழ்க்­கையில் எதிர்­நீச்சல் போட்டு இலக்கை அடைய முடியும் என்­பதை சன்­டி­யாகோ நிரூ­பித்­துள்ளார்.

ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மான பட­கோட்டப் போட்­டிகள் மரினா டா குளோ­றியா நீர்­நி­லையில் நடை­பெற்­றன.

செவ்­வா­யன்று நடை­பெற்ற நக்ரா 17 கலவை இரட்டைப் பாய்­மரப் பட­கோட்டப் போட்­டியில் 29 வயது­டைய சிசி­லியா கரன்ஸா சரோ­லி­யுடன் ஜோடி சேர்ந்து ஆர்­ஜன்­டீ­னா­வுக்கு தங்கப் பதக்கத்தை வென்­று­ கொ­டுத்தார்.

பாய்­மரப் பட­கோட்­டத்தில் பங்­கு­பற்­றிய வீரர்­களில் வயதில் மூத்­த­வ­ரான சன்­டி­யாகோ சிர­மங்­களை எதிர்­கொண்டு வந்த வரு­டத்தில் உரிய பலனை ரியொ ஒலிம்­பிக்கில் பெற்­று­க்கொண்டார்.

பட­கோட்­டத்தில் பங்­கு­பற்றும் அவ­ரது இரண்டு மகன்­மா­ரான யாகோ, க்ளோஸ் ஆகிய இரு­வரும் தந்­தையின் வெற்­றியைக் கொண்­டா­டு­மு­க­மாக கரை­யி­லி­ருந்து நீந்திச் சென்று தந்­தையை ஆரத்தழுவி பாராட்­டினர்.

கடந்த வருடம் புற்­று­நோயால் பீடிக்­கப்­பட்ட சன்­டி­யாகோ லெங், இதற்கு முன்னர் 5 ஒலிம்பிக் அத்தியா­யங்­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்­த­துடன் இரண்டு வெண்­கலப் பதக்­கங்­க­ளையும் வென்­றி­ருந்தார்.

இதனை அடுத்து தென் அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக நடத்­தப்­படும் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­குப்­பற்ற வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்தார்.

கடந்த ஐந்து அத்­தி­யா­யங்­களில் வெல்ல முடியாமல் போன தங்கப் பதக்கத்தை இம் முறை வென்றதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக சன்டியாகோ லெங் தெரிவித்தார்.

SAILING-OLY-2016-RIO