120 வயதிலும் ஆரோக்கியத்துடன் எளிமையாக வாழும் மனிதர்!!

336

21

எளிமையான வாழ்க்கையில் 120 வயதை எட்டியுள்ள அபூர்வ மனிதர். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதே அதற்கு காரணம் என்கிறார்.

வாரணாசி பகுதியில் வாழும், பிரம்மச்சாரியும் துறவியும் ஆன இவர் கடுமையான வறுமையிலும் பல நாட்கள் பட்டினி கிடந்தும் இளம் பருவத்தை கடந்திருக்கிறார்.

இவருடைய பெற்றோர் இவருக்கு ஆறு வயதிருக்கும்போதே இறந்துவிட்டனர். இவர் ஆன்மீக ஈடுபாட்டால் கோயிலில் ஒரு குருவிடம் அடைக்கலமானார்.

இவருக்கு உறவினர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து ஆன்மீகப் பணி காரணமாக தனித்தே வாழ்கிறார்.

இவர் கல்கத்தா நகருக்கு ஆன்மீகப் பயணியாக சென்றபோது, யோகா கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை விடாமல் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்.

யோகா பயிற்சியையும் ஒழுக்கத்தையும் ஒரு வைராக்கிய நெறியோடு கடைப்பிடித்து வருகிறார். இவருடைய எளிமையான பழக்கவழக்கங்களும் நலத்துக்கு ஒத்துழைக்கின்றன. பிரம்மச்சாரி என்பதோடு, எந்தவிதத்திலும் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஸ்போர்ட் ஆதாரம்: பாஸ்போர்ட் படி ஆகஸ்ட் 8, 1896 ல் பிறந்துள்ளார். அந்த கணக்குப்படி பார்த்தால் மூன்று நூற்றாண்டுகளாக பூமியில் வாழ்பவர் இவரே! வாழ்நாள் சாதனையாளர்களாக பலரை குறிப்பிடுகிறார்கள். ஆனால், வாழும் நாட்கணக்கிலே இவர் சாதனையாளராக உள்ளார். இதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.

அதற்கு காரணம், உலகப் பதிவுப்படி உலகின் மூத்தவராக இருந்த ஜப்பானியர் ஜீரோமோன் கிமுறா ஜூன் 2013 ம் ஆண்டில் தனது 116 வயதில் இறந்துவிட்டார். அதனால், இப்போது சிவானந்தா உலகின் முதியவர் என்பது உறுதியாகிறது.

பாஸ்போர்ட் அதிகாரிகள் அவர் வயதை கோயில் பதிவில் உள்ளதோடு ஒப்பிட்டும் உறுதிசெய்துள்ளனர். ஆனாலும், பல இந்தியர்கள் 12 வயது வரை குறைத்தும் பதிந்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

பிரபலமாவதை விரும்பாத சிவானந்த, தனது முதுமையை உலகப் பதிவில் இடம்பெறச் செய்ய விரும்பவில்லை அவருடைய நல விரும்பிகளே ஏற்பாடு செய்கின்றனர்.

அதே சமயம், வினோதமான முதுமைத் தோற்றம் அவர் 120 க்கு உரியவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இப்போதும் நீண்ட தூரத்துக்கு என்னால் ரயிலில் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும் எந்த மருத்துவ சிக்கலும் எனக்கு ஏற்படாது என்கிறார்.

மேலும், மின்சாரம், கார், தொலைக்காட்சி, போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளை நான் விரும்புவதில்லை. தற்போது நான் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி நிறைந்த வாழ்வை வாழ்ந்து வருகிறேன் என்று கூறுகிறார்.

சிவானந்தாவின் சில பழக்கங்கள்: பலநாள் வெறும் வயிற்றுடன் தூங்கியிருக்கிறேன் என்கிற, இவரது சாப்பாடு மிகவும் எளிமையானதுதான். பால், பழங்களையே ஒரு ஆடம்பர உணவாக நினைத்து ஒதுக்குகிறார் என்றால் பாருங்களேன்.

எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்காமல், வேகவைத்த அரிசி, குண்டு பருப்பு, இரண்டு பச்சைமிளகாய் தான் இவர் உணவாக சாப்பிடுகிறார்.

தூங்கும்போது, தலைக்கு தலையணைக்குப் பதிலாக ஒரு பலகையையே வைத்துக்கொள்கிறார்.

இவருடைய உயரம் 1.58 மீட்டர், பொதுவாக, 100 வயதுக்கு மேற்பட்டவர்களாக ஊடகங்களில் அறிமுகமாகிறவர்களின் தோற்றம் மிக சுருக்கங்களுடன் நலிவுற்றே காணப்படும். ஆனால், சிவானந்தா அப்படி இல்லை.

70 வயதில் ஒரு ஆரோக்கியமுள்ள முதியவர் போலவே தோன்றுகிறார்.

யோகாவை பற்றி எத்தனையோ சிறப்புகள் அதை நன்கு அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது. அதை முறையாக கடைப்பிடிக்க தெரிந்தவர்களுக்கு இந்த சாதனை சாதாரணம் என்பது போலவே சிவானந்தா பேச்சும் உள்ளது.

சிலர் யோகா பயிற்சி செய்தாலும் அதன் சரியான நலத்தை அடைவதில்லை. அதற்கு காரணம் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகளே!

இவர் ஒரு உணவு பாடம்: மருத்துவர்கள் உட்பட, உடல் நல பராமரிப்பு பற்றி ஊடகங்களில் பேசுபவர்கள். அனைத்து சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு அவசியத்தையும், ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலோ, செலவளிக்கப்படாத கலோரிகள் உடலில் சேர்வதாலோ வரும் நோய்கள் பற்றியும் கூறி அச்சுறுத்துவார்கள்.

இன்னொருபுறம் நவீன ஆடம்பரமான க்ரீம் வகை உணவுகள், பீட்சா, பார்க்கர் என நகர மக்களை பிடித்து சுழற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால், எளிமையான உணவும் பட்டினியுமாக 120 வயது வரை வாழ்ந்திருக்கிறார். இது மருத்துவர்களாலும் பின்பற்ற முடியாத ஒரு சாதனை அதுமட்டுமல்ல, உடலை பாதுகாப்பதே எளிமையான உணவுகள் மற்றும் பழக்கங்கள்தான் என்பதும் புரிகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த சூழலில் இருந்து, வெகுதூரத்துக்குச் சமுதாயத்தை கொண்டு சென்றுவிட்டோம். எளிதாக திரும்ப முடியாத ஆடம்பரத்துக்குள் இறுக்கிக் கொண்டோம். என்பதை இந்த வேளையில் நாம் உணரலாம்.

22 23