மகளுக்காக தந்தை எடுத்த முடிவு : 20 வருட கொடூர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!!

436

F

வங்கதேசத்தை சேர்ந்தவர் ஹாஷ்மோட் அலி(வயது 40). இவர் காட்டுக்குள் சென்று தேன் எடுப்பது, விறகு எடுப்பது மற்றும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இப்படி ஒருநாள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காட்டுக்குள் சென்ற போது அயர்ந்து உறங்கிவிட்டார்.

அடர்ந்த இருளில் புலி ஒன்று ஹாஷ்மோட்டை தாக்கியது, இதில் அவரது இடதுபக்க முகம் முற்றிலும் சேதமடைந்தது.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இவரது நண்பர்கள், புலியை துரத்தி விட்டு உயிருக்கு போராடிய ஹாஷ்மோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து அவர் உயிர் பிழைத்தாலும், இடதுபக்க முகம் விகாரமானது.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை சரிசெய்ய அவரிடம் பணமில்லை, மற்ற வேலைகள் எதுவும் தெரியாததால் மீண்டும் காட்டுக்கே சென்று வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது மகளுக்கு திருமண வயது நெருங்கி விட்டாலும், இவருடைய தோற்றத்தால் யார் பெண் கேட்டு வரமாட்டேன் என்கிறார்கள் என்ற மனஉளைச்சலில் தவிக்கிறார்.

கடந்த 20 வருடங்களாக ஊர் திருவிழா, பொதுக்கூட்டம், உறவினர்கள் விழா என எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை என கூறும் ஹாஷ்மோட், மகளுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

எனினும் இதற்கான பணம் இல்லாத காரணத்தால் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளாராம் ஹாஷ்மோட்.

F2 F3