இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது!!

271

MDD-demonstration

இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.

உலகில் போர் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரம் மோப்ப நாய்களில், இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான அல்வின் மெஜிஸ்டின் என்ற மோப்ப நாய் கூடுதல் கண்ணி வெடிகளை மீட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இலங்கையைச் சேர்ந்த அல்வின் மெஜிஸ்டின் நாய்க்கு விசேட விருது வழங்கப்படவுள்ளது.

புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை மீட்பது தொடர்பில் ஏற்கனவே இலங்கையின் மற்றுமொரு மோப்ப நாயான கய்ரோ ஸ்பாடகெஸுக்கும் சர்வதேச விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மோப்பா நாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தது. 2016ம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் போரின் போது புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அதிகளவில் அகற்றிய அல்வின் மோப்பநாய் பெல்ஜியத்தில் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அல்வின் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது.