யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பொலிஸார் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழ் பேசும் பொலிஸார் அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ். குடா நாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல்கள், கொலை, திருட்டு மற்றும் போதைபொருள் விநியோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






