தாமதமாக வந்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானியின் ஓட்டுநனர் அனுமதியும் இரத்து!!

564

Srilankan

அண்மையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவன விமானியின் விமான ஓட்டுநனர் அனுமதியும் (Pilot License) தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL554 என்ற விமானம் ஜேர்மனில் இருந்து கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், அந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமடைந்ததோடு, நேற்றுமுன்தினம் இரவு 07.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது அவர் மது போதையில் இருந்தாரா என மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவரது விமான ஓட்டுநர் அனுமதியும் தறகாலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.