காட்டூன் கதாபாத்திரத்தை மகிழ்விப்பதற்காக 12 வயதான வகுப்புத் தோழியை கத்தியால் குத்திய சிறுமிகள்!!

562

2

இணை­யத்­தள கதை­களில் வரும் திகில் பாத்­தி­ர­மான ஸ்லெண்டர் மேனை (Slender Man) மகிழ்விப்ப­தற்­காக, தனது வகுப்­பி­லுள்ள 12 வயது சிறு­மியை கத்­தியால் குத்­திய இரு சிறு­மிகள் தொடர்­பான வழக்கு அமெ­ரிக்­காவில் நடை­பெ­று­கி­றது.

விஸ்­கொன்ஸின் மாநி­லத்தைச் சேர்ந்த மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இரு சிறு­மி­களே தனது வகுப்­பி­லி­ருந்த மற்­றொரு மாண­வியைக் கத்­தியால் குத்­தி­ய­­தாக குற்றம் சுமத்தப்­பட்­டுள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட மாண­வியை இவர்கள் இரு­வரும் 19 தட­வைகள் கத்­தியால் குத்­தி­ய­தாக தெரிவிக்கப்ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மாணவி படு­கா­யங்­க­ளுடன் உயிர் தப்­பினார். 2014 மே மாதம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

குறித்த மாண­வியை அவளின் பிறந்த தினத்தை கொண்­டா­டு­வ­தற்­காக தம்­முடன் வரு­மாறு அழைத்த பின் இக்­குற்றச் செயல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மாணவி, விஸ்­கொன்ஸின் மாநி­லத்தின் வவ்­கேஷா நகரில் பற்­றை­க­ளுக்கு இடையி­லி­ருந்து சைக்­கி­ளோட்டி ஒரு­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்தார். அவரின் உடலின் பல்வேறு இடங்­களில் காயங்கள் காணப்­பட்­டன.

இம்­சம்­பவம் தொடர்­பாக மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இரு­வரும் கைது செய்யப்­பட்­டனர். குறித்த மாண­வியை தாம் கத்­தியால் குத்­தி­ய­மைக்கு மோர்கன் கேய்­ஸரும் அனீஷா வேயரும் கூறிய காரணம் பல­ருக்கும் மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

ஸ்லெண்டர் மேன் எனும் இணை­யத்­தள திகில் பாத்­தி­ரத்தை மகிழ்­விப்­ப­தற்­காக இந்நடவடிக்கையை தாம் மேற்­கொண்­ட­தாக இவ்­வி­ரு­வரும் கூறினர்.
அம்­மா­ண­வியை கொலை செய்­வ­தற்கு சில மாதங்­க­ளாக இவ்­வி­ரு­வரும் திட்டம் தீட்­டி­யமை பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து, மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகியோர் மீது கொலை முயற்சி குற்றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. தற்­போது 14 வய­தான இவ்­வி­ரு­வரும் சிறார்­க­ளாக அல்­லாமல், வளர்ந்­தோ­ராக கரு­தப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இவ்­வ­ழக்கில் தான் நிர­ப­ராதி என கடந்த வருடம் அனீஷா கூறினார். இந்­நி­லையில் மற்றொருவரான மோர்க்கென் கேய்­ஸரும் தான் நிர­ப­ராதி என கடந்த வாரம் தெரித்­துள்ளார். மனநலன் பாதிக்­கப்­பட்­டவர் என்ற அடிப்­ப­டையில் தான் நிரபராதி என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் மனநலன் பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறியவதற்கு இரு மருத்துவர்களை நீதிபதி நியமித்துள்ளார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

ஸ்லெண்டர் மேன் (Slender Man) என்­பது இணை­யத்­தள திகில் கதை­களில் வரும் ஒரு கற்­பனைப் பாத்­தி­ர­மாகும். மிக அதி­க­மான உய­ரமும் மெல்­லிய உட­ல­மைப்பும் கொண்ட கோட், சூட் அணிந்ததாக இப்­பாத்­திரம் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த எரிக் நட்சன் என்­பவர் இப்­பாத்­தி­ரத்தை உருவாக்கினார். 2009 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக இப்­பாத்­திரம் இணை­யத்தில் தோன்­றி­யது.

மனி­தர்­களை குறிப்­பாக சிறார்­களை பின்­தொ­டர்­வது, கடத்­து­வது, அச்­சுறுத்தும் ஒரு நப­ராக திகில் கதைகளில் இப்பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது.

1