பொலிசார் கன்னத்தில் அறைந்து முத்தமிட்டு ரகளை செய்த காதல் ஜோடி : களைகட்டிய காவல் நிலையம்!!

623

Sunita-Yadav-3
வேலூர் மாவட்டத்தில் காதல் ஜோடியினர் குடித்துவிட்டு பொலிசாரை அடித்ததோடு மட்டுமல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மக்கான் சிக்னலில் போக்குவரத்து எஸ்ஐ ராம்குமார் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கே வந்த காதல் ஜோடி பைக்கை நிறுத்தியுள்ளனர்.

பைக்கில் இருந்து இறங்கிய அர்ச்சனா, வாகன ஓட்டி ஒருவரின் கன்னத்தில் அடித்துள்ளார், இதனை தடுக்க வந்த பொலிஸ் ராம்குமார், அப்பெண்ணிடம் எதற்காக இவரை அடித்தாய் என கேட்டுள்ளார். இதற்கு அப்பெண் பொலிசாரின் கன்னத்திலும் பளார் விட்டுள்ளார்.அதன் பின்னர் காதல் ஜோடி விவேகானந்த், அர்ச்சனா ஆகிய இருவரும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காவல் நிலையத்திற்கு இந்த ஜோடியை அழைத்து செல்லும்போது, என்னையா பிடிக்க பார்க்கிறாய்? என பெண் பொலிசை பார்த்து கேள்வி எழுப்பிய அர்ச்சனா அவரது முகத்திலும் பளார் விட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இவர்களிடம், விசாரணை நடத்தியதில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது, பெங்களூரில் இருந்த அர்ச்சனா, தனது காதலன் விவேகானந்தை பார்ப்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளார்.

இந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக, இருவரும் மது அருந்திவிட்டு, வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர், அப்போதுதான் இவர்கள் வாகனம் ஓட்டும் விதத்தை வாகன ஓட்டி ஒருவர் கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக அர்ச்சனா அவரை அடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக விவேகானந்தை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, அர்ச்சனா அவர்ளை தடுத்துள்ளார்.

மேலும், சினிமா பாணியில் உதட்டோடு உதடு வைத்த நிலையில் முத்தம் கொடுத்துக்கொண்டனர். இதனைப்பார்த்த பொலிசார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

இதோடு விட்டுவிடாமல், காவல் நிலையத்தில் கூச்சலிட்ட அர்ச்சனா, பெண் பொலிசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார், அரசு ஊழியரின் பணியில் குறுக்கிட்டது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.