பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமெரிக்க இளைஞர் ஒருவர், வயோதிபர் போன்று வேடமணிந்து ஒளிந்து வாழ்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான ஷோன் மில்லர் எனும் இந்த இளைஞர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக அமெரிக்க பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்.
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதியிலிருந்து இவர் தலைமறைவாகியிருந்தார். அண்மையில் மசாசூசெட்ஸ் மாநலத்தின் கேப் கோட் நகரில் ஷோன் மில்லரைப் போன்ற உருவம் கொண்ட வயோதிபர் ஒருவர் நடமாடுவதை பொலிஸார் உணர்ந்தனர்.
கடந்த வியாழக்கிழமை அவர் தங்கியிருந்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்தனர். இதன்போது மாறு வேடத்தில் தப்பிச் செல்வதற்கு ஷோன் மில்லர் முயன்றார்.
ஆனால், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இரு துப்பாக்கிகள், 30,000 அமெரிக்க டொலர் பணம் ஆகியவற்றையும் அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.






