அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்திய சாலையிலிருந்து வீடு திரும்புவதற்கு பஸ் கிடைக் காததால் அம்பியூலன்ஸை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
43 வயதான லிஸா கார் எனும் இப் பெண்ணுக்கு எதிராக, ஒஹையோ மாநிலத்தின் சின்சினாடிட் நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்குச் சென்றிருந்த இப் பெண், அங்கிருந்து வீடு திரும்ப முயன்றபோது அன்றைய கடைசி பஸ்ஸை தான் தவற விட்டிருப்பதை உணர்ந்தார். அதையடுத்து வைத்தியசாலை வளாகத்திலிருந்து அம்பியூலன்ஸ் ஒன்றைத் திருடி அதை தனது வீடு நோக்கி அவர் செலுத்திச் சென்றார்.
மேற்படி அம்பியூலன்ஸை நோயாளி ஒருவர் சகிதம் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்தபோது, அதன் சாரதி அப்பால் சென்றிருந்த வேளையில் அவ் வாகனத்தை லிஸா திருடிச் சென்றார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்பியூலன்ஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் லிஸா கார் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






