வவுனியாவில் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் : சீர்கேடாக இயங்கிவந்த மூன்று உணவகங்களுக்கு சீல்!!

232

DSC02060

வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தொவித்துள்ளனர்.

அந்தவகையில் கடந்தவாரம் வவனியாவில் பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள சீர்கேடான முறையில் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது மூன்றுபேருக்கும் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட வவுனியாவில் மேலும் ஜந்து உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரத்ததைப் பேணுமாறும் அதற்கு கால அவகாசத்தினை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதற்குள் சீர் செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.